தமிழ்த் திரையுலகத்தில் தற்போதைய முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன்.
‘சீமராஜா’ படத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன், அடுத்து ரவிகுமார் இயக்கத்தில் பெயரிடப்படாத புதிய படத்தில் நடித்து வருகிறார்.
தற்போது ஒரு புதிய தோற்றத்திற்கு தன்னை மாற்றிக் கொண்டுள்ள சிவகார்த்திகேயன் அந்த தோற்றப் புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
கொஞ்சம் வளர்ந்த முடியுடன், தாடி மீசையுடன் புதிய கெட்அப்பில் இருக்கும் அந்தப் புகைப்படம் கருப்பு வெள்ளை புகைப்படமாக இருப்பதால் இன்னும் வித்தியாசமாக இருக்கிறது.
அந்த புகைப்படத்தை டிவிட்டரில் சிவகார்த்திகேயன் வெளியிட்டதுமே, இசையமைப்பாளர் அனிருத், “இந்த கெட்-அப்புல ஒரு படம் பண்ணுவோமா, தீம் மியூசிக் ரெடி” என பதில் சொல்ல அதற்கு சிவகார்த்திகேயனும்,
“சார் என்ன சார் கேக்கறீங்க, நாம பண்றோம் சார்…ஒரு ஹிட் ஆல்பம் கிடைக்கப் போகுது, நான் ரெடி சார், நாளை சந்திக்கிறேன், வேலையை ஆரம்பிக்கிறோம்,” என கூறியுள்ளார்.
ஆனால், அனிருத்தோ, ‘உடனே வாங்க’ எனக் கூறியுள்ளார்.
சிவகார்த்திகேயனின் புதிய தோற்றத்தை ரசிகர்களும் பாராட்டி வருகிறார்கள்.
Been sporting tis long hair&beard look for a while now & just before d haircut our #Kanaa hero @darshan991 ‘s ideas made me do tis photoshoot wit @aruntitanstudio & @anustylist mam.. thanks to them for doing tis in a short time..Tis is very new for me..hope u all will like it👍😊 pic.twitter.com/jQUop8vcwx
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) July 7, 2018