‘பேட்ட’ – மற்றுமொரு ‘கேங்ஸ்டர்’ படம் ?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, த்ரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ் மற்றும் பலர் நடிக்கும் படத்திற்கு ‘பேட்ட’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

‘பேட்ட’ படத்தின் முதல் பார்வை மோஷன் போஸ்டர் நேற்று யு டியூபில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

போஸ்டரைப் பார்த்ததும் இதுவும் ஒரு ‘கேங்ஸ்டர்’ படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ரஜினிகாந்த் இதற்கு முன்பு பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்த ‘காலா, கபாலி’ ஆகிய படங்களும் ‘கேங்ஸ்டர்’ படமாகத்தான் இருந்தது. அந்த வரிசையில் ‘பேட்ட’ படமும் இடம் பிடிக்கலாம்.

‘பேட்டை’ என்பதன் பேச்சுச் சொல்தான் ‘பேட்ட’. அந்த அர்த்தத்தில்தான் இந்தப் பெயரை வைத்திருக்கிறார்களா அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.

Read Previous

ஒரே ஒரு டிவீட், ரசிகர்களிடம் சிக்கிய அருண் விஜய்

Read Next

நோட்டா – டிரைலர்