இளையராஜா – யுவன் இணையும் முதல் படம்

இசையமைப்பாளர் இளையராஜா, அவருடைய இளைய மகன் யுவன்ஷங்கர் ராஜாவுடன் இணைந்து முதல் முறையாக ஒரு படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

‘பியார் பிரேமா காதல்’ படத்திற்குப் பிறகு யுவன்ஷங்கர் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தை சீனு ராமசாமி இயக்குகிறார். விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார்.

‘தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல்’ ஆகிய படங்களுக்குப் பிறகு சீனு ராமசாமி, விஜய் சேதுபதி நான்காவது முறையாக இணையும் படம் இது.

இப்படத்தின் பூஜை இன்று இளையராஜா வீட்டில் எளிமையாக நடைபெற்றது.

நிகழ்வில் இளையராஜா, யுவன்ஷங்கர் ராஜா, தயாரிப்பாளர் ராஜராஜன், விஜய் சேதுபதி, இயக்குனர் சீனு ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

டிசம்பர் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.

Read Previous

வைரமுத்து பற்றி ரகுமானுக்குத் தெரியாது – ஏஆர் ரைஹானா

Read Next

சசிகுமார், பாரதிராஜா நடிக்கும் ‘கென்னடி கிளப்’