வடசென்னை – சர்ச்சை காட்சிகள் நீக்கம்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஆன்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, அமீர் மற்றும் பலரது நடிப்பில் உருவான ‘வடசென்னை’ அக்டோபர் 17ஆம் தேதி வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.

படத்தில் அமீர், ஆண்ட்ரியா நடிப்பில் இடம் பெற்றிருந்த முதலிரவு காட்சி மீனவ மக்களின் மனம் புண்படும்படி இருந்ததாகவும் அக்காட்சியை படத்தில் இருந்து நீக்கும்படியும் கோரிக்கை எழுந்தது. தற்போது படக்குழுவினர் அந்தக் காட்சியை நீக்கி விட்டு அதற்கு பதிலாக அமீர், ஆண்ட்ரியா நடித்துள்ள வேறு இரு காட்சிகளை இணைத்துள்ளனர்.

மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும் வசனங்கள் சிலவும் நீக்கப்பட்டிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Read Previous

சவால்களை எதிர்த்துப் போராடும் ‘தேவ்’

Read Next

‘திமிரு புடிச்சவன்’ படத்திற்கு தீபாவளிக்கு வெளியாகும் தகுதி இருக்கு