சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில், இமான் இசையமைப்பில், அஜித், நயன்தாரா, விவேக், தம்பி ராமையா, யோகி பாபு , ரமேஷ் திலக், அனைகா, கோவை சரளா, மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘விஸ்வாசம்’. இப்படத்தின் தணிக்கை முடிந்து அனைவரும் பார்க்கும்படியான ‘யு’ சான்றிதழை வழங்கியுள்ளார்கள்.
அது பற்றி படத்தின் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் கூறியதாவது,
“எங்களது நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் குடும்பத்தோடு வந்து பார்க்கும் வகையில் படங்களைத் தருவதில் மிகவும் முனைப்போடு இருக்கும். எங்கள் தயாரிப்பில் வெளி வர இருக்கும் ‘விஸ்வாசம்’ படத்துக்கு தணிக்கை அதிகாரிகள் ‘யு’ சான்றிதழ் தந்ததில் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
எங்கள் நிறுவனத்தின் சார்பில் நாயகன் அஜித் குமார் சாருக்கும், இயக்குனர் சிவாவுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி. அவர்கள் இருவரும் தூண்களாக இருந்து உழைத்து இருக்கிறார்கள். இசை அமைப்பாளர் டி இமானின் இசை பொங்கல் கொண்டாடத்துக்கு உகந்தவாறு பட்டையை கிளப்பிக் கொண்டு இருக்கிறது. மாநகரம் முதல் குக்கிராமம் வரை பட்டி தொட்டி எங்கும் இந்த படத்தின் பாடல்கள் செம ஹிட். எல்லா தரப்பினரையும் கவரும் படமாக விஸ்வாசம் அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை,” என்கிறார் தயாரிப்பாளர் டி ஜி தியாகராஜன்.