‘கள்ளபார்ட்’ ஏப்ரல் மாதம் திரையில்…

மூவிங் பிரேம்ஸ் பட நிறுவனம் சார்பில் எஸ்.பார்த்தி எஸ்.சீனா இணைந்து தயாரிக்கும் படம் ‘கள்ளபார்ட்’.

அரந்த்சாமி கதாநாயகனாக நடிக்க, ரெஜினா கதாநாயகியாக நடிக்கிறார். ஹரிஷ் பெராடி, ஆதேஷ், பாப்ரி கோஷ், பேபி மோனிகா ஆகியோருட்ன் மற்றும் பலர்நடிக்கிறார்கள்.

வித்தியாசமான கதைக் களம் கொண்ட ஆக்‌ஷன் திரில்லர் படமாக ‘கள்ளபார்ட்’ உருவாகிக் கொண்டிருக்கிறது.

படத்தை பற்றி இயக்குனர் ராஜபாண்டி கூறுகையில்,

“அரவிந்த்சாமி எவ்வளவோ படங்களில் நடித்திருக்கிறார். அவருக்கு எந்த காரக்டர் கொடுத்தாலும் சிறப்பித்துவிடக் கூடியவர். இதில் அதிபன் என்கிற ஹார்ட்வேர் எஞ்சினியர் கதாபாத்திரம். நாம் என்ன சொல்கிறோமோ அதை அப்படியே உள் வாங்கி பிரதிபலிப்பார். அது ஸ்கிரீனில் இன்னும் பிரமிப்பை ஏற்படுத்திவிடும். ‘கள்ளபார்ட்’ அவருக்கு சிகரமாய் இருக்கும். ரெஜினா டான்ஸ் டீச்சர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

படப்பிடிப்பு வேகமாக வளர்ந்து வருகிறது. ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட உள்ளோம்,” என்கிறார் இயக்குனர்.

Read Previous

ரஜினிகாந்த், ஏஆர் முருகதாஸ் படம் உறுதி

Read Next

யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படம்