பிறந்த நாள் என்றாலே அனைவரும் கேக் வெட்டிதான் பிறந்த நாள் கொண்டாடுவது வழக்கம். ஆனால், நடிகர் ஆரி அவருடைய பிறந்த நாளில் அனைவருக்கும் இளநீர் கொடுத்து வித்தியாசமாகக் கொண்டாடி இருக்கிறார்.
ஆரி, பிக் பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா மற்றும் பலர் நடிக்கும் ‘அலேகா’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
படக்குழுவினர் அவரது பிறந்த நாளுக்காக 5 கிலோ எடையுள்ள கேக்கை தயார் செய்திருந்தனர். ஆனால், இயற்கை உணவுக்கு முன்னுரிமை தரும் ஆரி, கேக் என்பது இயற்கை உணவு வகையை சார்ந்தது கிடையாது என்று கூறி படப்பிடிப்புத் தளத்தில் உள்ள அனைவருக்கும் இளநீர் கொடுத்து தனது பிறந்த நாளைக் கொண்டாடினார்.
படத்தின் நாயகி ஐஸ்வர்யா தத்தா மற்றும் படக் குழுவினர் ஆரிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினர்.