தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தன் வசம் சில முக்கியமான திரைப்படங்களை சாதனையாக வைத்திருப்பவர் அனுஷ்கா.
நல்ல உயரம், அழகு, நடிப்பு என அவரை திரையில் ரசிக்கும் ரசிகர்களும் ஏராளம். ‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்களும் வந்த பிறகு அனுஷ்காவிற்கு இந்திய அளவில் நிறையவே ரசிகர்கள் சேர்ந்தனர்.
தமிழில் வெளிவந்த ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தின் குண்டான பெண் கதாபாத்திரத்திற்காக குண்டாக மாறியவருக்கு பின்னர் உடலை பழைய நிலைக்குக் கொண்டு வருவதற்கு சிக்கல் ஏற்பட்டது.
முன்னாள் யோகா மாஸ்டராக இருந்தவருக்கே அவ்வளவு சீக்கிரம் உடலை இளைக்க வைக்க முடியவில்லை. கடைசியில் நியூட்ரிஷியன் லூக் கோட்டின்ஹோ என்பவர் மேற்பார்வையில் உடலை முன்பை விட அழகாக இளைக்க வைத்துவிட்டார்.
கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் அனுஷ்கா இளைத்த விஷயம்தான் வைரலாகப் பரவிய ஒன்றாக இருந்தது.
மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பதற்கு அனுஷ்காவின் இந்த முயற்சி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
புதிய அனுஷ்காவிற்கு சீக்கிரமே பல புதிய படங்கள் தேடி வரும் என்பது நிச்சயம்.