ரௌடி பேபி – 200 மில்லியன் சாதனை

பாலாஜி மோகன் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், தனுஷ், சாய் பல்லவி மற்றும் பலர் நடித்த ‘மாரி 2’ படத்தில் இடம் பெற்ற ‘ரௌடி பேபி’ பாடல் 200 மில்லியன் (20 கோடி) பார்வைகளை யு டியுபில் பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளது.

தமிழ்த் திரையுலகத்தில், ஏன், தென்னிந்தியத் திரையுலகத்தில் இதுவரை எந்த ஒரு பாடலும் இப்படிப்பட்ட சாதனையைப் படைத்தது இல்லை.

இந்தப் பாடல் யு டியூபில் வெளியாகி 42 நாட்களே ஆகிறது. அதற்குள்ள இவ்வளவு பெரிய சாதனையைப் படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

யுவன் இசை, தனுஷின் பாடல் வரிகள், தனுஷ், தீ-யின் குரல், பிரபுதேவாவின் நடன அமைப்பு, தனுஷ், சாய் பல்லவியின் அசத்தலான நடனம், ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு, வாசுகி பாஸ்கர் ஆடை வடிவமைப்பு, ஜி.கே. பிரசன்னாவின் படத் தொகுப்பு, பாடலுக்கான அரங்க அமைப்பு என அனைத்துமே இந்தப் பாடலின் இப்படியான ஒரு வரவேற்புக்குக் காரணமாக அமைந்துள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு யுவன், தனுஷ் கூட்டணி மீண்டும் இணைந்த ‘மாரி 2’ படத்தின் பாடல்களுக்கு பட வெளியீட்டிற்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதை இந்தக் கூட்டணி சிறப்பாக பூர்த்தி செய்திருந்தது.

இன்று உலகம் முழுவதும் ‘ரௌடி பேபி’ பாடலை யு டியூபில் தினம் தினம் லட்சக் கணக்கானோர் பார்த்து வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் இடம் பெற்ற ஒரு பாடல் தென்னிந்திய அளவில் முதல் முறையாக 200 மில்லியன் சாதனையைப் படைத்திருப்பது தமிழ் சினிமாவுக்கே பெருமை.

Read Previous

கிரிஷ்ணம் – டிரைலர்

Read Next

இளநீர் கொடுத்து பிறந்த நாள் கொண்டாடிய ஆரி