ஏஆர் ரகுமான் இசையில் முதல் முறையாகப் பாடிய விஜய்

நடிகர் விஜய் நடிக்க வந்த நாளிலிருந்தே அவர் நடிக்கும் படங்களில் பாடல்களைப் பாடுவது வழக்கம்.

ஆனால், இதுவரையில் ஏஆர் ரகுமான் இசையில் அவர் பாடியதே இல்லை. தற்போது விஜய் நடித்து வரும் ‘பிகில்’ படத்திற்காக முதல் முறையாக அவரது இசையில் பாடியுள்ளார்.

‘சர்கார்’ படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கும் ‘பிகில்’ படத்திலும் அனைத்துப் பாடல்களையும் விவேக் எழுதுகிறார்.

‘வெறித்தனம்’ என்று ஆரம்பமாகும் பாடலைத்தான் விஜய் பாடியுள்ளார். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் இன்று வெளியிட்டார்கள்.

‘சர்கார்’ படப் பாடல்களைப் போலவே ‘பிகில்’ பாடல்களும் சூப்பர் ஹிட்டாகும் என்று ரசிர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Read Previous

ஜுலை 12 முதல் ‘வெண்ணிலா கபடி குழு 2’

Read Next

விஜய் டிவியில் புதிய தொடர் ‘ஆயுத எழுத்து’