கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – துல்கர் சல்மானின் 25வது படம்

வியாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் ஆண்டோ ஜோசஃப் ஃபிலிம் கம்பெனி தயாரிக்கும் படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’.

தேசிங் பெரியசாமி இயக்கும் இப்படத்தில் துல்கர் சல்மான், ரிது வர்மா, ரக்‌ஷன், நிரஞ்சனி அகத்தியன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

படம் பற்றி வியாகாம் 18 ஸ்டுடியோஸின் தலைமை செயல் அதிகாரி அஜித் அந்தரே கூறும்போது,

“ஒரு திரைப்பட தயாரிப்பாளராக, மொழிகளைத் தாண்டி பார்வையாளர்களை ஈர்க்கக் கூடிய கதைகளைச் சொல்வதை விட திருப்தி எதுவும் இல்லை. தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு கொடுக்கப்படும் கதைகளைக் கண்டு நான் எப்போதுமே ஈர்க்கப்பட்டிருக்கிறேன். ஆண்டோ ஜோசஃப்புடன் இணைந்து நாங்கள் தயாரிக்கும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைவது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்,” என்றார்.

தயாரிப்பாளர், ஆண்டோ ஜோசஃப் கூறுகையில்,

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்‘ போன்ற ஒரு படத்தை பார்வையாளர்களுக்கு வழங்குவதில் பெருமைப்படுகிறேன். இது வியாகாம் 18 ஸ்டுடியோஸ் உடன் எனது முதல் திரைப்படம், மற்றும் மூன்றாவது முறையாக நான் துல்கர் சல்மானுடன் பணிபுரியும் படம். இந்த படத்திற்கு இதை விட ஒரு சிறந்த கூட்டணி கிடையாது,” என்றார்.

இயக்குனர் தேசிங் பெரியசாமி கூறும்போது,

“எனது முதல் படம் இந்தியாவின் முன்னணி ஸ்டுடியோக்களில் ஒன்றான வியாயாகாம் 18 ஸ்டுடியோஸால் வெளியிடப்படுவது என் கனவு நனவான தருணம். இந்த திரைப்படத்தை தயாரித்த ஆண்டோ ஜோசஃப் பிலிம் நிறுவனத்துக்கும், அதை மேலும் உயர்த்திய வியாகாம் 18 ஸ்டுடியோவுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மிகவும் ரசிக்கப்படக் கூடிய ஒரு ஜாலியான இந்தப் படம் பார்வையாளர்களை மகிழ்விக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன்,” என்றார்.

துல்கர் சல்மான் கூறுகையில்,

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ ஒரு சுவாரஸ்யமான கதை. இதுபோன்ற அருமையான நடிகர்கள் மற்றும் குழுவினருடன் ஒரு பகுதியாக இருந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது எனது 25 வது படம் என்பது என்னை மேலும் சிறப்பாக உணர வைக்கிறது. ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்துக்காக வியாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் ஆண்டோ ஜோசஃப் ஆகியோருடன் இணைந்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இப்படம் சொல்லும் காதலை பார்வையாளர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறேன்,” என்றார்.

Read Previous

ஜோதிகா நடிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’

Read Next

சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன்