தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடியனாக இருப்பவர் யோகிபாபு. இவர் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பல படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் யோகிபாபுவை மையமாக வைத்து தற்போது உருவாகிக் கொண்டு இருக்கும் படம் ‘காதல் மோதல் 50/50’. இது ஒரு ஆக்ஷன் கலந்த பேய் படம்.
‘தர்மபிரபு, கூர்க்கா’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து யோகி பாபு நடித்து வெளிவரவிருக்கும் படம் இது. இப்படத்திற்கு தரண்குமார் இசை அமைத்துள்ளார். பிரதாப் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
அலெக்சாண்டர் கதை எழுத பிரபல கன்னட திரைப்படமான ‘த்ரயா’ என்ற படத்தின் இயக்குனர் கிருஷ்ணா சாய் திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இப்படத்தில் யோகிபாபுவிற்கென பிரத்யேக பிரம்மாண்டமான சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் பில்லா ஜெகன் அமைக்க உள்ளார்.
மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்க தயார் ஆகிக் கொண்டிருக்கும் ‘கண்ணை நம்பாதே’ என்ற படத்தின் தயாரிப்பாளர் வி.என்.ஆர் இந்த ‘காதல் மோதல் 50/50’ படத்தினை லிபிசினி கிராப்ட்ஸ் மூலம் தயாரித்து வருகிறார்.
படத்தின் இறுதிக் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் டீஸர் வெளியாக உள்ளது.