மெய் – விமர்சனம்

கதை

அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு வருகிறார் டாக்டருக்குப் படித்து முடித்த நிக்கி சுந்தரம். அப்பாவின் நண்பரது மெடிக்கல் ஷாப்பில் உதவியாக இருக்கிறார். அந்த ஷாப்பில் வேலை பார்க்கும் ஒருவர் திடீரென மருத்துவ சிகிச்சையில் இறக்கிறார். மேலும், அவரது இறப்புக்கு நிக்கிதான் காரணம் என மருத்துவமனை நிர்வாகம் திசை திருப்பி விடுகிறது. அந்த இறப்பில் மர்மம் இருக்கிறது என நினைக்கும் நிக்கி, அதை அவரது காதலி ஐஸ்வர்யா ராஜேஷுடன் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். அதில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

நடிப்பு

அறிமுக நடிகர் நிக்கி சுந்தரம் கதாபாத்திரத்திற்குள் தன்னை பொருத்திக் கொள்ள நிறையவே சிரமப்படுகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் பெண் மெடிக்கல் ரெப்பாக நடித்திருக்கிறார். நாயகனுடனேயே இருக்கும் கதாபாத்திரம் என்றாலும் நடிப்பை வெளிப்படுத்த சிறப்பான காட்சிகள் குறைவுதான். வில்லன்களாக அதிக பரிச்சயமில்லாத முகங்கள் நடித்திருக்கிறார்கள். கிஷோர் வழக்கம் போல இயல்பாக நடித்து மனதைக் கவர்கிறார். தன் மகளை இழந்து தவிக்கும் பாசக்கார அப்பாவாக சார்லி கண் கலங்க வைக்கிறார்.

இசை, மற்றவை

பிருத்திவிகுமார் பாடல்களுக்கும், அனில் ஜான்சன் பின்னணிக்கும் இசை அமைத்திருக்கிறார்கள்.

+

தொய்வில்லாமல் நகர்கிறது படம்…

இதற்கு முன் ‘என்னை அறிந்தால், காக்கி சட்டை’ ஆகிய படங்களில் பார்த்த அதே கதைதான்.

Read Previous

காக்கி – விஜய் ஆண்டனி ஜோடியாக இந்துஜா

Read Next

கென்னடி கிளப் – விமர்சனம்