கதை
ஒட்டன்சத்திரத்தில் கென்னடி கிளப் என்ற பெயரில் பெண்களுக்கான கபடிப் பயிற்சியை அளித்து வருபவர் முன்னாள் ராணுவ வீரர் பாரதிராஜா. அவருக்கு இதயக் கோளாறு காரணமாக ஆபரேஷன் நடப்பதால் அவரது பயிற்சிப் பணியை சசிகுமார் ஏற்கிறார். அவர்களது கிளப்பில் இருந்து இந்திய அணி பயிற்சிக்கு ஒரு பெண் செல்கிறார். ஆனால், அவர் தேர்வாக வேண்டுமென்றால் 30 லட்சம் கேட்கிறார் தலைமை தேர்வாளர். அதைக் கொடுக்க முடியாத காரணத்தால் அந்தப் பெண் தற்கொலைக்கு முயல்கிறார். அவரைக் காப்பாற்றிவிடுகிறார்கள். ஆனால், வேறு எந்தப் பெண்ணும் தொடர்ந்து பயிற்சிக்கு வர மறுக்கிறார்கள். ரயில்வே வேலையில் இருக்கும் சசிகுமார் இது பற்றி அறிந்து மீண்டும் வந்து அவர்களுக்கு புத்திமதி சொல்லி பயிற்சியை ஆரம்பிக்கிறார். டெல்லியில் நடைபெறும் தேசியப் போட்டியில் இவர்களது அணி கலந்து கொள்கிறது. அதில் வெற்றி பெற்றார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
நடிப்பு
இயக்குனர் பாரதிராஜாவின் நடிப்பில் அனுபவம் தெரிகிறது. சசிகுமார் ஜோடியே இல்லாமல் நடித்திருக்கிறார். கபடி பயிற்சியாளராக அப்படியே ஃபிட் ஆகிறார். கபடி வீராங்கனைகளாக நடித்திருக்கும் புதுமுகங்கள் அனைவரும் நிஜமான கபடி வீராங்கனைகளாம். மிக இயல்பாக நடித்திருக்கிறார்கள். முரளி சர்மா தான் மெயின் வில்லன். பல படங்களில் இதற்கு முன் பார்த்திருக்கும் அதே ஊழல் மிகுந்த தலைமை தேர்வாளர். சூரியின் அந்த ஒரே ஒரு காட்சி வருகை படத்திற்கு எந்த விதத்திலும் பயனில்லை.
இசை, மற்றவை
இமான் இசையில் பாடல்களுக்கு முக்கியத்துவம் இல்லை. பின்னணி இசை பரவாயில்லை. ஒளிப்பதிவாளர் குருதேவ் கபடிக் காட்சிகளை அற்புதமாகப் படமாக்கியிருக்கிறார்.
+
கபடி விளையாட்டை மையப்படுத்தி இயல்பான படமாகக் கொடுத்திருப்பது…
–
அழுத்தமான கதை, திரைக்கதை இல்லாதது….