2020 பொங்கல் தினத்தன்று புதிய படங்கள் எதுவும் வரவில்லை. அதற்கு முன்னதாகவே ஒரே ஒரு படம் மட்டுமே வெளிவர உள்ளது.
ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ள ‘தர்பார்’ படம் மட்டுமே இந்த வருட பொங்கல் படமாக வெளிவருகிறது.
பிரபுதேவா நடித்துள்ள ‘பொன் மாணிக்கவேல்’, சிவா நடித்துள்ள ‘சுமோ’ ஆகிய படங்கள் பொங்கலுக்கு வெளிவரும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அந்தப் படங்கள் தற்போது வரவில்லை. எனவே, பொங்கலுக்கு ‘தர்பார்’ ராஜ்ஜியம் மட்டுமே.
தன்னுடைய முந்தைய வசூல் சாதனைகளை ரஜினிகாந்த் இந்தப் படம் மூலம் நிச்சயம் முறியடிப்பார் என சினிமா உலகில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.