தர்பார் – 85 காட்சிகளும் ஹவுஸ்புல்

தமிழ் சினிமா வரலாற்றில் இப்படி ஒரு சம்பவம் இதற்கு முன் நடைபெற்றிருக்க வாய்ப்பில்லை என்று சொல்லுமளவிற்கு ‘தர்பார்’ படத்திற்கான வரவேற்பு மிக அதிகமாக உள்ளது.

எந்த பண்டிகை நாட்களிலும் வெளியாகாமல் ஒரு வேலை நாளில் நாளை மறுதினம் ஜனவரி 9ம் தேதி படம் உலகம் முழுவதும் வெளியாகிறது.

அதற்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சென்னை, ஈசிஆர் சாலையில் உள்ள மாயாஜால் மல்டிபிளக்ஸ் தியேட்டரில் 9ம் தேதிக்கான 85 காட்சிகளும் மொத்தமாக முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது.

ஆன்லைன் இணையதளங்களில் முன்பதிவு செய்யச் சென்றால் அந்த தியேட்டரில் முதல் நாள் 9ம் தேதிக்கான காட்சிகள் அனைத்துமே சிவப்பு வண்ணத்தில் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதற்கான நிறத்துடன் காட்சி அளிக்கிறது.

இத்தனை வருடங்களாக பாக்ஸ் ஆபிசில் தான்தான் முதலிடம் என்பதை ரஜினிகாந்த் மீண்டும் நிரூபித்துள்ளார்.

 

Read Previous

சூரரைப் போற்று – டீசர்

Read Next

விருது வாங்க மட்டும் வரும் நயன்தாரா

Most Popular