பேமிலி பாய் – அப்பா உன் ஆரிராரோ…பாடல் வெளியீடு

மெக்கானிக் பிக்சர்ஸ் மற்றும் மில்லினியல்ஸ் மூவி புரொடக்ஷன் LLP நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘பேமிலி பாய்’.

மித்துன் மாணிக்கம் இயக்கியுள்ள இப்படத்திற்கு நிர்மல் JP இசையமைத்துள்ளார். மித்துன் மாணிக்கம், எம். சுகுமார், சரண் சுதாகரன், அனுகிரஹா எஸ். நம்பியார், நிகிலா சங்கர், அனிதா சம்பத், ‘பசங்க’ சிவகுமார், சிவம், அருள்தாஸ், பி. எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு குடும்ப உறவுகளை மையப்படுத்திய ஃபேமிலி டிராமா மற்றும் ஆக்‌ஷன் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. வரும் டிசம்பர் 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘அப்பா உன் ஆராரிரோ’ தற்போது வெளியாகியுள்ளது.

நிர்மல் JP இசையமைப்பில், மித்துன் மாணிக்கம் பாடல் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலை தேசிய விருது பெற்ற பின்னணிப் பாடகர் சுந்தரய்யர் மற்றும் வெங்கட்ரமணன் இணைந்து பாடியுள்ளனர். தந்தையின் அன்பு, அருமை மற்றும் அவரது பிரிவால் ஏற்படும் ஏக்கம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. தந்தை – மகன் உறவின் உணர்வுகளை வெளிப்படுத்தும் மெலடிப் பாடலாக இது அமைந்துள்ளது.

கார்த்திக் கே. கதிரவன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜிஜேந்திரன் V படத்தொகுப்புப் பணிகளையும், C. K. முஜிபுர் ரஹ்மான் கலை இயக்கப் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.

முஹம்மத் கனி ஃபைசல் மற்றும் டாக்டர் கே. அருண் ஆறுமுகம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தைப் பலூன் பிக்சர்ஸ் நிறுவனம் தமிழகத்தில் வெளியிடுகிறது.

ஏற்கனவே இப்படத்தின் முதல் பாடலான ‘தீராகணம்’ வெளியாகியுள்ள நிலையில், தற்போது இரண்டாவது பாடலாக ‘அப்பா உன் ஆராரிரோ’ வெளியாகியுள்ளது.

Read Previous

மெடிக்கல்கிரைம் திரில்லர் ‘நிறம்’

Read Next

சிட்டுக்குறிஞ்சி – விமர்சனம்