‘96’, ‘மெய்யழகன்’ படங்களை இயக்கிய பிரேம் குமார் இயக்கத்தில், பஹத் பாசில் நடிக்கும் புதிய படத்திற்கு ‘அசரீரி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கும் இப்படம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வருகிறது.
இப்படத்தில் பஹத் பாசிலுக்கு ஜோடியாக ஷிவதா நடிக்கிறார். மேலும், சேத்தன், ஹரிஷ் உத்தமன், கருணாகரன், சரண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். கோவிந்தராஜ் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். குமார் கங்கப்பன் கலை இயக்கத்தையும், மகேஷ் மேத்யூ சண்டைக் காட்சிகளையும் கவனிக்கின்றனர்.
‘அசரீரி’ படத்தின் தலைப்பு மற்றும் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, இப்படம் 2027 ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு வெளியீடாகத் திரையரங்குகளில் வெளியாகிறது.