தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் பொத்தினேனி, தற்போது இயக்குநராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார். அவர் இயக்குநராக அறிமுகமாகும் முதல் திரைப்படமான #RaPo23 படத்தின் ப்ரீ-லுக் போஸ்டரை சர்வதேச ஆண்கள் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ளார்.
‘தி ஸ்டோரி ஆஃப் எ லோன் வுல்ஃப்’ (The Story of a LONE WOLF) என்ற வாசகத்துடன் வெளியாகியுள்ள இந்தப் போஸ்டர் படத்தின் கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘லோன் வுல்ஃப்’ என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கதாபாத்திரம், தனக்கென ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து உலகத்தைத் தனியாக எதிர்கொள்ளும் வலிமையும் சுதந்திரமும் கொண்ட மனிதனின் கதையாக இருக்கும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.
கிருஷ்ணா பொத்தினேனி தயாரிப்பில், ராப்போ சினிமேட்டிக்ஸ் நிறுவனம் இப்படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது. இப்படத்தில் பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ்முக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் மூலம் அவர் தெலுங்குத் திரையுலகில் அறிமுகமாகிறார். சம்யுக்தா கதாநாயகியாக நடிக்கிறார்.
தேசிய விருது பெற்ற திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்ய, ஏ.எஸ். பிரகாஷ் தயாரிப்பு வடிவமைப்புப் பணிகளை மேற்கொள்கிறார். பீட்டர் ஹெய்ன், விக்ரம் மோர் மற்றும் கெவின் ஆகியோர் சண்டைக் காட்சிகளை வடிவமைக்கின்றனர்.
நடிகராகத் தொடர்ந்து கவனம் பெற்று வரும் ராம் பொத்தினேனி, தற்போது இயக்குநராகவும் களமிறங்கியிருப்பது அவரது திரைப்பயணத்தில் புதிய முயற்சியாக அமைந்துள்ளது. #RaPo23 படத்தின் டைட்டில் க்ளிம்ப்ஸ் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.