அப்பா குட்டி – டிரைலர்

மு. மாறன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி இசையமைத்து கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘அப்பா குட்டி’. விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் பிரீத்தி அஸ்ரானி, குழந்தை நட்சத்திரம் லிதன்யா சிவபாலன், பகவதி பெருமாள், முத்துக்குமார், அருவி மதன், ஹரிப்ரியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தாயில்லாமல் வளரும் மகளுக்கும், அவரை அன்புடன் வளர்க்கும் தந்தைக்குமான உறவை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைந்துள்ளது. மகளின் வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத சம்பவங்கள், அவரது தாயின் பின்னணி குறித்த மர்மம், அதனைத் தொடர்ந்து உருவாகும் சட்டப் போராட்டம் என டிரைலரில் பல்வேறு திருப்பங்கள் இடம்பெற்றுள்ளன.

குடும்பப் பாசம், காதல், ஆக்‌ஷன் மற்றும் நீதிமன்றப் பின்னணியிலான காட்சிகளுடன் வெளியாகியுள்ள இந்த டிரைலர், தந்தை – மகள் உறவை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்துவதுடன், கதையில் இடம்பெறும் மர்மங்களையும் வெளிப்படுத்தாமல் வைத்துள்ளது.

‘அப்பா குட்டி’ திரைப்படம் வரும் நவம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Read Previous

சத்தியவான் சாவித்திரி – டிரைலர்

Read Next

ஓம் – டிரைலர்