அறிமுக இயக்குநர் மாறன் கார்த்திகேயன் இயக்கத்தில், அஜய் கார்த்தி, தீபா பாலு நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் ‘ஸ்டேஷன்’.
கேபி இன்போடெயின்மென்ட் சார்பில் கே. தினேஷ் குமார் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஒரே இரவில் நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்ட திரைக்கதையுடன் இப்படம் உருவாகி வருகிறது.
‘காளிதாஸ் 2’, ‘டார்க்’ உள்ளிட்ட படங்களில் நடித்த அஜய் கார்த்தியும், ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘ஹார்ட் பீட்’ இணையத் தொடரின் மூலம் கவனம் ஈர்த்த தீபா பாலுவும் இப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.
காதல், குற்றம், அதிரடி என மூன்று அம்சங்களைக் கலந்து உருவாகும் இப்படத்தின் கதை, ஒரே இரவில் நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்டது. அஜய் கார்த்திக்கு ஜோடியாக தீபா பாலு நடிக்கிறார். இவர்களுடன் இயக்குநரும் நடிகருமான ஏ. வெங்கடேஷ், தினேஷ் பிரபாகர், பாலஹாசன், ரமேஷ் திலக், மூணார் ரமேஷ், ஜெய் கிருஷ்ணா, வாழை ஜானகி, மெட்ராஸ் ரமா, அனு ஸ்ரீ வேலன், பிரகாஷ், சோபியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் காவல் நிலையத்தை மையமாகக் கொண்டே அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக சென்னையில் உள்ள திரைப்படத் தொழில்நுட்பக் கல்லூரியில் பிரம்மாண்டமான காவல் நிலைய அரங்கு பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் மொத்தக் காட்சிகளில் சுமார் 70 சதவீதம் இந்த அரங்கில் படமாக்கப்படுகின்றன.
படக்குழுவினர்:
எழுத்து & இயக்கம்: மாறன் கார்த்திகேயன்
தயாரிப்பு: கே. தினேஷ் குமார்
ஒளிப்பதிவு: சுபாஸ் பாரதி
இசை: அருண் ராஜ்
கலை இயக்கம்: அய்யப்பன் S
சண்டைப் பயிற்சி: பிரபு ஜாக்கி
ஆடை வடிவமைப்பு: தினேஷ் பாபு G V
படத்தொகுப்பு: முத்தையன் U
நிர்வாகத் தயாரிப்பு: விக்கி ஆண்ட்ரு
VFX மேற்பார்வை: சரவண பாலாஜி K – Time Stone FX
மார்க்கெட்டிங்: Digitally Powerful
மக்கள் தொடர்பு: சதீஷ் குமார் – S2 Media