கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் ‘செங்குலம்’

அறிமுக இயக்குநர் சின்னசாமி பொன்னையா இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில், கௌதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘செங்குலம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

கண்ணன் ரவி குழுமம் சார்பில் கண்ணன் ரவி தயாரிக்கும் இப்படத்திற்கு தீபக் ரவி இணைத் தயாரிப்பு செய்கிறார். இப்படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்படத்திற்கு கிஃப்ட்சன் ராபர்ட் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர். மோகன், வைர பாலன் கலை இயக்கத்தைக் கவனிக்க, தமிழ் அரசன் படத்தொகுப்பு செய்கிறார். மகேஷ் மேத்யூ சண்டைப் பயிற்சி இயக்குநராகப் பணியாற்றுகிறார்.

கோவில்பட்டியில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, பொள்ளாச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், காஷ்மீரிலும் நடைபெற்று வருகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் 2027-ம் ஆண்டு இப்படம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

Read Previous

மௌன மொழிகள் – இசை வெளியீட்டு விழா