வைபவ் நடிக்கும் ‘மணிகண்டா’

தந்த்ரா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், வைபவ் கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘மணிகண்டா’. விஷ்ணு சசி சங்கர் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில், இயக்குநர் வெங்கட் பிரபு கிரியேட்டிவ் புரொடியூசராகப் பணியாற்றுகிறார். இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகர் ரவிமோகன் வெளியிட்டுள்ளார்.

முன்னதாக ‘தத் த்வம் அஸி’ என்ற பெயரில் உருவான இப்படத்திற்கு தற்போது ‘மணிகண்டா’ எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

மாலை அணிந்து விரதமிருந்து, கடினமான பாதையைக் கடந்து ஐயப்பனைத் தரிசிக்கச் செல்லும் பக்தர்களின் ஆன்மீகப் பயணத்தை மையமாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. பக்தி, நம்பிக்கை, ஆக்‌ஷன் மற்றும் உணர்ச்சிகரமான தருணங்கள் நிறைந்த குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகி வருகிறது.

தந்த்ரா ஃபிலிம்ஸ் சார்பில் ஜே.கே. சரவணா மற்றும் எம். ராஜாராம் தயாரிக்கின்றனர். மலையாளத்தில் வெளியான ‘மாளிகப்புரம்’ படத்தை இயக்கிய விஷ்ணு சசி சங்கர் இப்படத்தை இயக்குகிறார். வைபவ் ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார். அரவிந்த் ஆகாஷ், ஆடுகளம் நரேன், ஹரீஷ் பேரடி, அர்ஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

பிரேம் ஜி அமரன் இசையமைக்க, யுவன் செல்வா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் கே.எல் படத்தொகுப்பையும், சூர்யா ராஜீவன் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். ஸ்டண்ட் சில்வா மற்றும் சக்தி சரவணன் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். ஆதித்யா தங்கீராலா, நந்தகுமார் தமிழ்செல்வன், ஜே.கே. சரவணா, ப்ருத்வி ஆதித்யா ஆகியோர் எழுத்துப் பணிகளில் இணைந்துள்ளனர்.

படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2026-ம் ஆண்டு கார்த்திகை மாதத்தை முன்னிட்டு படத்தைத் திரையரங்குகளில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. டீசர், இசை வெளியீடு உள்ளிட்ட விளம்பர நிகழ்வுகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வர உள்ளன

Read Previous

நவீன் சந்திரா நடிக்கும் 51வது படம்

Read Next

பேமிலி பாய் – டீசர் வெளியீடு