‘மூக்குத்தி அம்மன் 2’ டிரைலர்

நயன்தாரா நடிப்பில், சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தெய்வீகம், புராணம், ஃபேண்டஸி மற்றும் ஆக்‌ஷன் கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம், வரும் நவம்பர் 6-ம் தேதி தீபாவளி வெளியீடாகத் திரையரங்குகளில் வெளியாகிறது.

டிரைலரில், நயன்தாரா பெண் காவலராகவும், மகாசக்தியாகவும் இரு வேறுபட்ட தோற்றங்களில் இடம்பெறுகிறார். புராணக் காலத்தில் தொடங்கும் மோதல், நிகழ்காலத்திலும் தொடர்வதுடன், உலகை அச்சுறுத்தும் தீய சக்திகளை எதிர்த்து மகாசக்தி போராடும் காட்சிகள் பிரம்மாண்டமாக அமைந்துள்ளன. அப்பாவி மக்களையும் குழந்தைகளையும் காப்பாற்ற அம்மன் அவதரிப்பது கதையின் முக்கிய அம்சமாக இடம்பெற்றுள்ளது.

ரெஜினா கேசன்ட்ரா மற்றும் துனியா விஜய் ஆகியோர் எதிர்மறைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஊர்வசி, யோகி பாபு, அபிநயா, இனியா, மைனா நந்தினி உள்ளிட்ட பலரும் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்ய, ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார்.

முதல் பாகத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கிய நிலையில், இரண்டாம் பாகத்தை சுந்தர் சி இயக்கியுள்ளார். பிரம்மாண்டமான காட்சிகள், தெய்வீக அம்சங்கள் மற்றும் நயன்தாராவின் மாறுபட்ட தோற்றங்கள் நிறைந்த டிரைலர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Read Previous

பிளாக்நைட் பாய்ஸ் – பூஜையுடன் ஆரம்பம்