பூரி ஜெகன்னாத் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஸ்லம் டாக்’

விஜய் சேதுபதி, சம்யுக்தா, பூரி ஜெகன்னாத், சார்மி கௌர், ஜே.பி.   நாராயண் ராவ் கொண்ட்ரோலா, பூரி கனெக்ட்ஸ், ஜே.பி. மோஷன் பிக்சர்ஸ் இணையும் “ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு”  படத்தின் முதல் பார்வையை படக்குழு வெளியிட்டுள்ளது.

தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத், விஜய் சேதுபதி இணையும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் நடந்து வருகின்றன. 

இந்தப் படத்தை பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் பூரி ஜெகன்னாத் மற்றும் சார்மி கௌர் இணைந்து தயாரிக்க, ஜேபி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் நாராயண் ராவ் கொண்ட்ரோலா இணைந்து தயாரிக்கிறார்.

விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு, படக்குழு படத்தின் தலைப்பையும் முதல் பார்வை போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. ‘ஸ்லம் டாக்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு ‘33 டெம்பிள் ரோடு’ என்ற டேக்லைன் வழங்கப்பட்டுள்ளது. 

விஜய் சேதுபதி, இதுவரை தனது திரை வாழ்க்கையில் முயற்சிக்காத, முற்றிலும் புதிய ஒரு பாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார்.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சம்யுக்தா நடிக்க, தபு மற்றும் துனியா விஜய்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, பிரம்மாஜி மற்றும் விடிவி கணேஷ் நகைச்சுவை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அர்ஜுன் ரெட்டி, அனிமல் போன்ற படங்களுக்கு இசையமைத்த, தேசிய விருது பெற்ற ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்,  படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்தப் படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் பான்-இந்தியா படமாக பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

Read Previous

த மம்மி ரிட்டர்ன்ஸ் – பூஜையுடன் ஆரம்பம்

Read Next

மரகத நாணயம் 2 – அறிமுக வீடியோ வெளியீடு