இதிரைப்படத்தில், கியாரா அத்வானி, ஏற்றுள்ள ‘நாடியா’ கதாபாத்திரத்தின் முதல் பார்வை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் கீத்து மோகன்தாஸ் உருவாக்கியுள்ள தீவிரமான, கச்சிதமான உலகத்தில், கியாராவின் இந்த பாத்திரம் அவரது திரைப்பட வாழ்க்கையில் முக்கியமான திருப்புமுனையாக அமையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கியாராவின் கதாபாத்திரம் பற்றி இயக்குநர் கீத்து மோகன்தாஸ் கூறியதாவது..,
“சில கதாபாத்திரத்தின் நடிப்பு, ஒரு திரைப்படத்திற்குள் மட்டும் சுருங்கி விடாது; அவை ஒரு கலைஞரையே மறுபரிசீலனை செய்யக்கூடியதாக இருக்கும். இந்தப் படத்தில் கியாரா திரையில் உருவாக்கியிருப்பது உண்மையிலேயே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது. ஒரு இயக்குநராக, அவர் இக்கதாப்பாத்திரத்தை திரையில் கொண்டு வந்த விதத்திற்கும், அவரது நம்பிக்கைக்கும், மனப்பூர்வமான அர்ப்பணிப்பிற்கும் நான் மிகவும் பெருமை கொள்கிறேன்.”
KGF: Chapter 2 மூலம் பாக்ஸ் ஆபீஸில் வரலாறு படைத்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, யஷ் மீண்டும் பெரிய திரைக்குத் திரும்பும் படம் ‘டாக்ஸிக்’.
யாஷ் மற்றும் கீத்து மோகன்தாஸ் இணைந்து கதையை எழுதியுள்ள இந்தப் படம், கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகி வருகிறது. ஆங்கிலம் மற்றும் கன்னடம் மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்படும் ‘டாக்ஸிக்’ திரைப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.
தேசிய விருது பெற்ற ராஜீவ் ரவி ஒளிப்பதிவையும், ரவி பஸ்ரூர் இசையையும், உஜ்வல் குல்கர்னி எடிட்டிங்கையும், அபித் புரொடக்ஷன் டிசைனையும் கவனிக்கின்றனர். ஆக்ஷன் காட்சிகளுக்கு ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குநர் J.J. பெரி (John Wick) மற்றும் தேசிய விருது பெற்ற அன்பறிவ் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
வெங்கட் K. நாராயணா மற்றும் யாஷ் இணைந்து கேவிஎன் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனங்களின் சார்பில் தயாரிக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, வரவிருக்கும் மார்ச் 19-ம் தேதி, ஈத், உகாதி, குடி பட்வா ஆகிய பண்டிகை நாளில் வெளியாக உள்ளது.