செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில், லலித் குமார் தயாரிப்பில், விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள “சிறை” படத்தின் முதல் பார்வையை, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமூக வலைத்தளம் வழியே வெளியிட்டார்.
‘டாணாக்காரன்’ இயக்குநர் தமிழ், வாழ்க்கையில் சந்தித்த உண்மை அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்குகிறார்.
ஒரு காவல் அதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையக் கரு.
விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, அவரது ஜோடியாக நடிகை அனந்தா நடிக்கிறார். இப்படத்தில் தயாரிப்பாளர் லலித் குமார் மகன் அக்ஷய் குமார் நடிகராக அறிமுகமாகிறார். இவரது ஜோடியாக அனிஷ்மா நடிக்கிறார்.
ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்க, மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்ய, பிலோமின் ராஜ் எடிட்டிங் மேற்கொள்ள, ஸ்டண்ட் காட்சிகளை பிரபு வடிவமைத்துள்ளார். நிர்வாக தயாரிப்பாளராக அருண் மற்றும் மணிகண்டன் பணியாற்றுகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, வேலூர் சிவகங்கை ஆகிய பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. விரைவில் இசை மற்றும் டிரைலர் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.