நலன் குமாரசாமி படத்தில் கார்த்திக்கு வில்லனாக நடித்து வருகிறார் சத்யராஜ்.
’ஜப்பான்’ படத்தைத் தொடர்ந்து, நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் கார்த்தி.
ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண், கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.
இந்தப் படத்துக்கு ‘வா வாத்தியாரே’ என்று தலைப்பிட்டுள்ளது படக்குழு. முதலில் இதன் டீஸரை எம்.ஜி.ஆரின் பிறந்த நாளான ஜனவரி 17-ம் தேதி வெளியிட திட்டமிட்டார்கள். ஆனால், பணிகளின் தாமதத்தால் வெளியாகவில்லை.
‘வா வாத்தியாரே’ படத்தில் இரண்டு கெட்டப்களில் நடித்து வருகிறர் கார்த்தி. இதில் எம்.ஜி.ஆர் ரசிகராக ஒரு கெட்டப் அடக்கம்.
இந்தப் படத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு வில்லனாக நடித்து வருகிறார் சத்யராஜ். இந்தக் கதை எம்.ஜி.ஆர் ரசிகர் பின்னணியாக கொண்டது என்பதால், இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார் சத்யராஜ்.
தனது தொடக்கம் காலம் முதலே தீவிர எம்.ஜி.ஆர் ரசிகராக வலம் வருபவர் சத்யராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.