தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் டிசம்பர் 28-ம் தேதி சென்னையில் காலமானார். முழு அரசு மரியாதையுடன் சென்னையிலுள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது.
விஜயகாந்த்தின் மறைவுக்கு பல்வேறு முன்னணி நடிகர்கள் நேரில் அஞ்சலி செலுத்ததாது, சமூக வலைத்தளத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
தற்போது புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து, ஒவ்வொரு நடிகரா சென்னை திரும்பி வருகிறார்கள். அவர்கள் அனைவருமே நேரடியாக விஜயகாந்த்தின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்துவார்கள் என கருதப்பட்டது. ஆனால், தனுஷ் அப்படிச் செய்யாமல் ‘கேப்டன் மில்லர்’ விழாவில் கலந்துக் கொண்டார்.
இந்தச் செயல் சமூக வலைத்தளத்தில் பெரும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. ‘கேப்டன் மில்லர்’ விழாவில் மெளன அஞ்சலி மற்றும் தனுஷ் தனது பேச்சில் விஜயகாந்த் பற்றிக் குறிப்பிட்டது என இருந்தாலும், நேரில் அஞ்சலி செலுத்ததாது பெரும் தவறு தான்.
ஏனென்றால், தனுஷின் தந்தை இயக்குநர் கஸ்தூரிராஜா அளித்த பேட்டியொன்றில் “எனது மகளின் மருத்துவ சீட்டுக்காக கல்லூரியில் சிபாரிசு செய்து வாங்கிக் கொடுத்தவர் விஜயகாந்த்.
இதற்காக என்னுடன் அவர் வந்தது மறக்கவே முடியாது. இன்று என் மகள் பெரிய மருத்துவராக இருக்கிறார் என்றால் அதற்கு விஜயகாந்த் தான் காரணம்” என்று கூறியிருக்கிறார். தனுஷிற்கு இதெல்லாம் மறந்துவிட்டதா என்ன?