அஜித் வழியை மற்றவர்கள் பின்பற்றுவார்களா ?

கொரானோ வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள சிக்கலைத் தீர்க்க நிதியுதவியை மத்திய அரசும், மாநில அரசும் கோரின.

தமிழ் சினிமா நடிகர்களில் சிவகார்த்திகேயன்தான் முதன் முதலில் தமிழக அரசுக்காக 25 லட்ச ரூபாய் நிதியுதவியை அளித்தார்.

அதன்பிறகு இன்று நடிகர் அஜித் மாநில அரசுக்கு 50 லட்சம், மத்திய அரசுக்கு 50 லட்சம், பெப்ஸி அமைப்புக்கு 25 லட்சம் என 1.25 கோடியை அளித்துள்ளார். மேலும், திரைப்பட மக்கள் தொடர்பாளர்கள் சங்கத்துக்கு 2.5 லட்சம், இரண்டு திரைப்படப் பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு தலா 2.5 லட்சம் என மொத்தமாக 1 கோடியே 32 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளார்.

இப்படி மத்திய அரசு, மாநில அரசு, திரைப்படத் துறை சார்ந்த அமைப்புகளுக்கு அஜித் தான் முதன் முதலாக மொத்தமாக நன்கொடை வழங்கியுள்ளார். அவரது நன்கொடைக்கு சம்பந்தப்பட்டவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்கள்.

தனித் தனியாக அஜித் வழங்கிய நன்கொடை மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாக அமைந்துவிட்டது.

அஜித் வழியில் மற்ற முன்னணி நடிகர்களும் அதை பின்பற்றுவார்களா என்பது இனிமேல்தான் தெரியும்.

Read Previous

அஜித் தந்த 1.25 கோடி நன்கொடை, விஜய் எவ்வளவு கொடுப்பார் ?

Read Next

8 கிராமங்களைத் தத்தெடுத்த ரஜினிகாந்த் நண்பர்