உலக அளவில் புகழ் பெற்ற ஒரு டிவி நிகழ்ச்சி, டிஸ்கரி சேனலில் ஒளிபரப்பாகும் ‘இன் டு த வைல்ட், வித் பியர் கிரில்ஸ்’.
அந்நிகழ்ச்சியில் உலகப் பிரபலங்கள் மட்டுமே இடம் பெறுவார்கள். இதற்கு முன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இதில் பங்கேற்றுள்ளார்.
பிரபலங்களை ஒரு காட்டுக்குள் அழைத்துச் சென்று, அங்கு அவர்களை சில சாகசச் செயல்களை செய்ய வைத்து பேட்டி எடுக்கும் நிகழ்ச்சி இது.
பிரதமர் மோடிக்கு அடுத்து நடிகர் ரஜினிகாந்த் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு கர்நாடகாவில் உள்ள பண்டிப்பூர் காட்டில் நடந்தது.
அந்நிகழ்ச்சியின் ஒளிபரப்பு கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி இரவு ஒளிபரப்பானது.
அந்த வாரத்திற்கான டிவி ஒளிபரப்பு ரேட்டிங்கில் தனிப் பெரும் சாதனையை படைத்துள்ளது. இந்த வருடம் ஒளிபரப்பான அந்த வகை நிகழ்ச்சிகளில் அதிக ரேட்டிங்கைப் பெற்று முதலிடத்திலும், கடந்து போன வருட நிகழ்ச்சிகளைப் பொறுத்தவரையில் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.
12 சேனல்களில் ஒளிபரப்பான நிகழ்ச்சியால் டிஸ்கவரி சேனலின் ஒட்டுமொத்தமாக 86 சதவீதம் உயர்ந்து 12.4 மில்லியன் மக்களை சென்றடைந்திருக்கிறது.
இன்போடெயின்மென்ட் வகை டிவிக்களின் ரேட்டிங் பங்கில் 89 சதவீதத்தைப் பெற்றுள்ளது. அதற்கு முன்பு அந்த நேரத்தில் ஒளிபரப்பான முந்தைய நான்கு வார நிகழ்ச்சிகளைக் காட்டிலும் 5 மடங்கு ரேட்டிங் அதிகமானது.
தமிழ் டிவி சேனல்களான கலர்ஸ் தமிழ், ஜெயா, ராஜ் டிவி ஆகியவற்றைக் காட்டிலும் 20 மடங்கு அதிகமான ரேட்டிங்கை அந்த நிகழ்ச்சியின் ஒஒளிபரப்பு நேரத்தில் பெற்றுள்ளது.
#ThalaivaOnDiscovery என்ற ஹேஷ்டேக் சமூக வலைத்தளங்களில் 3.32 பில்லியன் அளவிற்கு தடம் பதித்து 1.41 பில்லியன் மக்களை சென்று சேர்ந்திருக்கிறது.