யுவன் இசையில் பாடிய ரம்யா நம்பீசன்

பாசிட்டிவ் பிரின்ட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பிளான் பண்ணி பண்ணனும்’. 

இப்படத்திற்காக ஒரு கிராமியப் பாடலை படத்தின் நாயகி யுவன் இசையில் பாடியுள்ளார். இப்பாடலை பாரதியாரின் கொள்ளுப் பேரன் நிரஞ்சன் பாரதி எழுதியுள்ளார். 

ரம்யா நம்பீசன் இதற்கு முன்பு யுவன் இசையில் பாடியதில்லை. இப்போதுதான் முதல் முறையாகப் பாடியுள்ளார்.

படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மார்ச் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

Read Previous

கஷ்டப்படும் அஜித் தயாரிப்பாளர்…

Read Next

Panni Kutty – Official Trailer

Most Popular