ரஜினிகாந்தின் ‘காலா’, ஏப்ரல் 27ம் தேதி வெளியீடு

‘காலா’ படம் வரும் ஏப்ரல் மாதம் –  27 ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட ‘2.0’ படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் முடிவடையாததால் ‘காலா’ படம் ‘2.0’ படத்திற்கு முன்னதாகவே வெளியாகும் என சில நாட்கள் முன்பு நாமும் செய்தி வெளியிட்டிருந்தோம்.

ரஜினிகாந்த்தும் ‘காலா’ படத்தை முதலில் வெளியிடலாம் என ‘2.0’  தயாரிப்பாளர்களிடம் சொன்னதை அடுத்து ‘காலா’ படத்தின் பின்னணி இசை வேலைகள் சில நாட்களுக்கு முன்பு ஆரம்பமாகின.

ஒரு மணி நேரத்திற்கு முன்னர் ‘காலா’ படத்தின் வெளியீட்டுத் தேதி பற்றிய அறிவிப்பும், புதிய போஸ்டரும் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் தெரிவித்திருந்தார்.

அதன்படி சற்று முன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டது.

‘காலா’ படம் ஏப்ரல் – 27 ம் தேதி வெளிவருதால் ரஜினி ரசிகர்களுக்கும் மகிழ்ச்சிதான்.

Read Previous

‘காலா’ – ஏப்ரல் – 27 ம் தேதி ரிலீஸ், அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Read Next

Pyaar Prema Kaadhal – Official Motion Poster

Most Popular