சில்லுனு ஒரு சந்திப்பு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடை பெற்றது. விமல், ஓவியா, தீபாஷா , மனோபாலா நடிக்க ஃபைசல் இசையமைக்கும் இப்படத்தை ரவி லல்லின் இயக்குகிறார்.
ஓவியா, தீபாஷா இருவருமே இந்த சந்திப்பில் கலந்து கொண்டதால் நிஜமாகவே டபுள் சில்லாக இருந்தது சந்திப்பு நடைபெற்ற இடம். ஆனால் ‘சில்’ ஆக நடந்து கொண்டிருந்த சந்திப்பை ஒரே ஒரு கேள்வியால் ‘சூடாக’ ஆக்கி விட்டார்கள் பத்திரிகையாளர்கள்.
ஒரு பத்திரிகையாளர் , விமலிடம் தொடர்ந்து ஓவியா கூடவே நடிக்கிறீங்களேன்னு கேக்க, இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத (!) விமல், இனி ஓவியா கூட ஜோடி சேர்ந்து நடிக்க மாட்டேன் என்றார். இதே முடிவை அவங்களும் எடுத்திருக்காங்கன்னு நினைக்கிறேன் என்று மேலும் ஒரு பதிலைச் சொன்னார். ஆனால், ஓவியா அதற்கு எந்த ரியாக்ஷனையும் கொடுக்கவில்லை.
ஒரு ஜோடியை சேர்த்து வைக்கிறதுலயும், பிரிச்சி வைக்கிறதுலயும் நம்மாளுங்களுக்கு அவ்வளவு சந்தோஷம்….ம்ம்ம்ம்…