நவம்பர் 7ல் விஸ்வரூபம் இசை வெளியீடு

     மல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடித்து வரும் படம் ‘விஸ்வரூபம்’. இப்படத்தின் இசை வெளியீடு அடுத்த மாதம் நவம்பர் 7ம் தேதியன்று கமல்ஹாசன் பிறந்த நாளில் வெளியிடப்பட இருக்கிறது.

தமிழ்த் திரையுலகில் முதல் முறையாக ஒரு திரைப்படத்தின் இசை வெளியீடு ஒரே நாளில் மூன்று மாநகரங்களில் நடை பெற இருக்கிறது. மதுரை, கோவை, சென்னை ஆகிய மூன்று நகரங்களில் இந்த விழா நடைபெற இருக்கிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகியுள்ள விஸ்வரூபம் திரைப்படத்தில் ஆன்ட்ரியா, பூஜா குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். சங்கர்-எசன்-லாய் இசையமைத்துள்ளனர்.

அமெரிக்கா, கனடா, மும்பை, சென்னை போன்ற இடங்களில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. ஆரோ 3டி தொழில்நுட்பத்தில் வெளி வரவுள்ள முதல் இந்தியத் திரைப்படம் விஸ்வரூபம் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

தயாரிப்பாளராகிறார் ‘மோகன்’

Read Next

மீண்டும் ‘சீதா’வாக நடிப்பேன் – நயன்தாரா