கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படம் 2013, ஜனவரி 11ம் தேதியன்று தமிழ், தெலுங்க, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியாக உள்ளது.
இது தொடர்பாக இன்று பத்திரிகைகளில் நேரடியாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே இந்த படத்தின் வெளியீடு பற்றி சில சர்ச்சைகள் எழுந்தன. அதற்கு கமல்ஹாசனும் பதிலளித்திருந்தார்.
‘ஆரோ 3டி’ என்ற ஒலிப்பதிவு தொழில்நுட்பத்தில் வெளிவர உள்ள முதல் படம் என்பதால், அந்த தொழில்நுட்பத்தை புகுத்துவதற்காக சில தாமதங்கள் ஏற்பட்டதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
டிசம்பர் முதல் வாரத்தில் படத்தின் இசை வெளியீடு நடக்கும் எனத் தெரிகிறது.