இளையராஜா பாராட்டிய ‘நீதானே என் பொன்வசந்தம்’

   கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் ஜீவா, சமந்தா நடிக்கும் படம் ‘நீதானே என் பொன்வசந்தம்’.

இப்படத்தின் முதல் பிரதி தயாராகி இசைஞானி இளையராஜா அவர்களுக்கு போட்டுக் காட்டப்பபட்டது. படத்தைப் பார்த்து வியந்து போன இசைஞானி, இயக்குனர் கௌதம் மேனன் மற்றும் படக்குழுவினர் அனைவரையும் பாராட்டினார்.

இசைஞானியிடமிருந்து வந்த பாராட்டு வார்த்தைகளைக் கேட்ட படக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சமீபத்தில் இப்படத்தின் புதிய டிரைலர்கள் வெளியிடப்பட்டு ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று திங்கள் கிழமை இப்படத்தின் சென்சார் நடைபெற இருக்கிறது.

டிசம்பர் 14ம் தேதியன்று படம் வெளிவருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

Read Previous

அஜித் புதிய படம் பூஜை

Read Next

சென்னையில் 10வது சர்வதேச திரைப்பட விழா