‘டீல்’ செய்து கார் பெற்ற இயக்குனர்

     ருண் விஜய், கார்த்திகா ஜோடியாக நடிக்கும் ‘டீல்’ படத்தை இயக்கி வருபவர் அறிமுக இயக்குனர் ஆர். சிவஞானம்.

இந்த படத்தை எம்.சுசில்மோகன் மற்றும் எம்.ஹேமந்த் தயாரிக்கிறார்கள்.

முதல் 18 நாட்கள் எடுத்த சீன்களை எடிட்செய்த பின், பார்த்த தயாரிப்பாளர் ஹேமந்த், அவருடைய காரை இயக்குனர் சிவஞானத்திற்கு பரிசாக கொடுத்துள்ளார். எதிர்பாராத இந்த திடீர் பரிசால் இயக்குனர் சிவஞானம் மெய்சிலிர்த்துப் போய் இருக்கிறார்.ஹ

இந்த படத்தில் சுஜா வருணி, ‘மெரினா’ சதீஷ், நடன இயக்குனர் கல்யாண், வம்சி, ஜெயபிரகாஷ், ரேணுகா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

60 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது.

‘டீல்’னு பேர் வச்ச ராசியோ, என்னமோ,  படப்பிடிப்பு நடக்கும் போதே காரை பரிசா வாங்கிய இயக்குனர்,  படம் ரிலீசான பிறகு ஒரு வீட்டையும் சேர்த்து ‘டீல்’ பேசிடுவாரோ….வாழ்த்துக்கள்…டைரக்டர் …

 

Read Previous

சற்குணம் தயாரிப்பில் ‘மஞ்சப்பை’

Read Next

2012 தமிழ் சினிமா – ஒரு பார்வை