பட்டைய கிளப்பப் போறாரு ‘பவர் ஸ்டார்’

   power star ‘பவர் ஸ்டாரு’க்கு போட்டியாக இன்னொருவரா என ரசிகப் பெருமக்கள் நேற்று மிகப் பெரிய கவலையில் ஆழ்ந்தனர்.

அவர்களுக்கு இனிப்பான ஒரு புத்தாண்டு செய்தி பவர் ஸ்டாரிடமிருந்து வந்திருக்கிறது.

‘பவர் ஸ்டார்’ நடித்துள்ள நான்கு படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளி வர இருக்கின்றன. முதலில் , சந்தானத்துடன் இணைந்து நடித்துள்ள ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படம் பொங்கலுக்கு வருகிறது.

தொடர்ந்து, அவர் நடித்த “மன்னவன், தேசிய நெடுஞ்சாலை, சீனு எம்.ஏ.பி.எல்” ஆகிய படங்கள் வெளிவர உள்ளன. சந்தானம் கேட்டுக் கொண்டதாலேயே இப்படத்தின் வெளியீடுகளை கொஞ்சம் தள்ளி வைத்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் நடிக்கும் ‘ஐ’ படமும் இந்த ஆண்டு வெளிவந்து விடும். இந்த படத்தில் படம் முழுவதும் வரும் கதாபாத்திரம்தான் பவர் ஸ்டாருக்கு.

எனவே, பவர் ஸ்டார் ரசிகர்கள் யாரும் வருத்தமடைய வேண்டாம். இந்த ஆண்டு ‘பவர் ஸ்டார்’ ஆண்டுதான். அவருக்கு போட்டியாக யாரும் அவ்வளவு சுலபத்தில் வந்து விட முடியாது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

Read Previous

விக்ரம் பிரபு நடிக்கும் 3வது படம்

Read Next

சமந்தாவைப் பிடிக்கும் – த்ரிஷா