பில்லா’ படத்திற்குப் பிறகு விஷ்ணுவர்தன் – யுவன்ஷங்கர்ராஜா – அஜித் – நயன்தாரா கூட்டணி மீண்டும் இணைந்து பணி புரியும் படத்திற்கு விரைவில் டைட்டில் அறிவிக்க இருக்கிறார்கள்.
இந்த படத்தில் ஆர்யா, டாப்ஸீயும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இந்த படத்திற்கு டைட்டில் முடிவு செய்து விட்டதாகவும், விரைவில் அது பற்றிய முறையான அறிவிப்பு வெளிவரும் என்றும் படத்தின் இயக்குனர் விஷ்ணுவர்தன் தெரிவித்துள்ளார்.
அநேகமாக, இதற்காக ஒரு விழா நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படி ஒன்று நடந்தால், தமிழ் சினிமாவில் தலைப்புக்காக விழா நடத்திய முதல் படம் என்ற பெருமை இந்த படத்திற்குக் கிடைக்கும்.
பல வெற்றிப் படங்களைத் தயாரித்த ஸ்ரீ சூர்யா மூவீஸ் ஏ.எம்.ரத்னம் இந்த படத்தை தயாரித்து வருகிறார்.