அனுஷ்கா பங்கேற்ற விழாவில் சலசலப்பு…

     anushka mirchi audio releaseபிரபாஸ், அனுஷ்கா, ரிச்சா, ‘நம்ம’ சத்யராஜ் நடிக்கும் தெலுங்குப் படம் ‘மிர்ச்சி’. தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படத்தின் இசை வெளியீடு நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்ட ரசிகர்கள் கூட்டத்தால் சலசலப்பு ஏற்பட்டது. போலீசார் விரைந்து வந்து கூட்டத்தைக் கட்டுப்படுத்தி தொடர்ந்து விழா அமைதியாக நடக்க உதவினர்.

தேவிஸ்ரீபிரசாத் ஒரு கட்டத்தில் படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடலுக்கு நடனமாட பிரபாஸ், அனுஷ்காவை அழைக்க, அவர்களிவரும் மேடையில் ஆடியதைக் கண்ட ரசிகர்கள் உற்சாக மிகுதியால் மேடையை நோக்கி ஓடி வர, சில நிமிடங்கள் விழா நடக்கும் இடமே களேபரமானது.

‘மிர்ச்சி’ன்னாலே காரம் தானே…அதான் ரசிகர்கள் சூடாயிட்டாங்க போல…

 

Read Previous

அஜித் – நயன்தாரா பட டைட்டில் விரைவில்…

Read Next

ஒரு நாள் முன்னதாகவே ‘அலெக்ஸ் பாண்டியன்’