நேர்மையாக, நியாயமாக தொழில் செய்கிறேன் – கமல்ஹாசன்

     kamal hassanவிஸ்வரூபம் படத்தின் வெளியீட்டுப் பிரச்சனை சம்பந்தமாக கமல்ஹாசன் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

கமல் பேசுகையில், “என்னுடைய வசதிக்காகவே விஸ்வரூபம் படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்துள்ளேன். என்னை யாரும் கட்டுப்படுத்தவில்லை.

விஸ்வரூபம் படத்தின் வெளியீட்டு தேதியை நான்தான் அறிவிப்பேன். வேறு யாரும் அதைப் பற்றி அறிவிக்க முடியாது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிட விரும்புகிறோம். மக்களும் டிடிஎச் மூலம் பார்ப்பதற்கு கொஞ்சம் அவகாசம் தேவை.

இப்படி பல விஷயங்கள் உள்ளதால் வசதியான வேறு ஒரு வெளியீட்டு  தேதியை விரைவில் அறிவிப்பேன்,” என்றார்.

திரையுலகைச் சேர்ந்த சிலர் திரையரங்க வெளியீடு நடக்கும் அன்றே டிடிஎச்-ல் வெளியிட கேட்டுக் கொண்டதைப் பற்றிக் கேட்ட போது, ‘அதைப் பற்றி விரைவில் முடிவெடுப்பேன்’ என்றார்.

“நான் ஒரு நேர்மையான, நியாயமான வர்த்தகம் செய்கிறேன். என்னைத் தடுக்க யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. என்னை பணி செய்ய விடாமல் தடுப்பவர்கள் மீதும், மிரட்டுபவர்கள் மீதும், சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்” என்றும் கமல்ஹாசன் கூறினார்.

Read Previous

36 திரையரங்குகளில் 2 தெலுங்கு படம்..

Read Next

ஜனவரி 25ல் ‘விஸ்வரூபம்’ ரிலீஸ் – கமல்ஹாசன் அறிவிப்பு