‘விஸ்வரூபம்’ திரைப்படம் வரும் 25ம் தேதியன்று 400க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
அனைத்து ஏரியாக்களும் விற்று விட்டதாக கோடம்பாக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இயக்குனர் பாலுமகேந்திரா விஸ்வரூபம் படத்தைப் ஸ்பெஷலாகப் பார்த்து கமல்ஹாசனை பெரிதும் பாராட்டியுள்ளார்.
‘‘கமல்ஹாசன் ஒரு தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன். நான் எப்படி சினிமாவே நேசிக்கிறேனோ, அவரும் அப்படியே நேசிக்கிறார். அவரை உலக நாயகன் என அழைப்பதை விட உலக இயக்குனர் என அழைப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார் பாலுமகேந்திரா.