பாரீஸ் பட விழாவில் ‘வழக்கு எண் 18/9’ சிறந்த திரைப்படமாக தேர்வு

parris-film-festivalபாரீஸில் ஜனவரி(2013) 16-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை “முதல் தெற்காசிய திரைப்பட விழா” (SAFF) நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா மற்றும் நேபாளம் போன்ற நாடுகளிலிருந்து திரைப்படங்கள் பங்கேற்றன.

இந்தியத் திரைப்படம் என்றாலே இந்தித் திரைப்படம் என்ற வரம்பைத் தாண்டி நடைபெற்ற இந்த விழாவில் பல்வேறு ஆசிய மொழி திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அவற்றில் திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா லிட் நிறுவனம் தயாரித்து, சமீபத்தில் வெளிவந்த “வழக்கு எண் 18/9” சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் தயாரிப்பாளர் N. லிங்குசாமியும் இயக்குநர் பாலாஜி சக்திவேலும் பாரீஸில் நடந்த இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

பாலியல் குற்றங்களில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நவீன இளைஞர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படமான இதில், புதுமுகங்கள், மிதுன் முரளி, ஸ்ரீ, ஊர்மிளா மஹந்தா மற்றும் மணிஷா யாதவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும் வழக்கு எண் 18/9 சிறந்த பிறமொழி திரைப்படமாக ஹாலிவுட்டின் உயரிய விருதான ஆஸ்கார் விருதுக்கும் பரிந்துரைக்கப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Read Previous

‘லட்டு’ பிறந்தநாள் கொண்டாடும் சந்தானம்

Read Next

மீண்டும் ஹிந்தியில் விக்ரம்