இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹிந்தித் திரையுலகில் நுழைகிறார் விக்ரம்.
2010ம் ஆண்டு வெளிவந்த ‘ராவணன்’ திரைப்படம் மூலம் அறிமுகமானார் விக்ரம். அதன் பின் எந்த ஹிந்திப் படத்திலும் நடிக்கவில்லை.
இப்போது, தமிழ், ஹிந்தியில் ஒரே நேரத்தில் தயாராகியுள்ள ‘டேவிட்’ படம் மூலம் மீண்டும் ஹிந்திக்குப் போகிறார். ‘டேவிட்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 1ம் தேதியன்று இரு மொழிகளிலும் வெளியாகிறது.
‘இந்த படத்துக்காக விக்ரமை ஒரே முறைதான் சந்திச்சி, கதையையும், அவருடைய கதாபாத்திரத்தைப் பத்தியும் சொன்னன். அதுக்கப்புறமா, அவரை படப்பிடிப்புலதான் பார்த்தேன். அன்னைக்கு அவருடைய கேரக்டருக்குள்ள அவ்வளவு இன்வால்வ்மென்டோட இருந்தாரு, ” என்று விக்ரம் புகழ் பாடுகிறார் டேவிட் படத்தின் இயக்குனர் பிஜாய் நம்பியார்.
தமிழில், விக்ரம், ஜீவா இருவரும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘டேவிட்’ என்ற பெயர் கொண்டுள்ள மூன்று பேரது வாழ்வில் நடக்கும் சம்பவங்கள்தான் இப்படம்.