‘பிஸி’ இயக்குனரானார் பிரபு தேவா

abcd audio_00006‘ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ் ’ விரைவில் வெளியாகவிருக்கும் ஹிந்தி ‘ Any Body Can Dance’ படத்தின் தமிழ்ப் பதிப்பு. இந்தியாவில் வெளியாகவிருக்கும் முதல் டான்ஸ் 3டி திரைப்படம்.

இப் படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் இயக்குனர் ரெமோ டிசௌசா, பிரபு தேவா, நா.முத்துக்குமார் யுடிவி தனஞ்செயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் டிரைலரையும், சில பாடல்களையும் காட்டினார்கள். நடனத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த படத்தில் பாடல்கள் அசத்தலாக இருப்பதில் ஆச்சரியமில்லை.

ஆனால், விழாவில் ஆச்சரியப்பட வைத்த செய்தி வேறு ஒன்று. இந்தியாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக நம்ம ஊர் பிரபு தேவா ஆகிவிட்டார் என்பதுதான். 2017ம் ஆண்டு வரை பல ஹிந்திப் படங்களை இயக்க அவரை ‘புக்’ செய்து விட்டார்களாம்.

இந்த படத்தில் பிரபு தேவாதான் நடிக்க வேண்டும் என யுடிவி நிறுவனத்தினர் முடிவு செய்து பிரபுதேவாவை வற்புறுத்தி நடிக்க வைத்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல, இரண்டாம் பாகம் எடுப்பதைப் பற்றியும் முடிவெடுத்து விட்டார்களாம். இருக்கும் பிஸியில் பிரபுதேவாதான் கால்ஷீட் தர வேண்டும்.

“இந்த படத்துல நான்தான் நடிக்கணும்னு டைரக்டர் ரெமோ வந்து கேட்டதால நடிச்சேன். ஆனால், என்னை விட பயங்கரமா டான்ஸ் ஆடறவங்கள்லாம் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. இன்டர்நேஷனல் லெவல் காம்படிஷன்லலாம் ஆடியிருக்காங்க. என்னை இன்னும் பழைய சின்ன பையனா பார்க்காதீங்க, 39 வயசு ஆளா பார்த்து ஆட வைங்கன்னு டைரக்டர் கிட்ட கேட்டுக்கிட்டேன்.”

நம்ம ஊரு ஆளு நான்…அங்க போய் ஆடி, நடிச்சிருக்கேன், பார்த்துட்டு சொல்லுங்க,” என யதார்த்தமாக சிக்கனமாக பேசிவிட்டு அமர்ந்து விட்டார் பிரபு தேவா.

அவர் சிக்கனமாகப் பேசினாலும், அவருடைய ஆட்டமும், இயக்கமும் இந்திய திரையுலகையே பேச வைக்கிறதே….வாழ்த்துக்கள் மாஸ்டர்…

Read Previous

இது கதிர்வேலன் காதல் – ‘பாலி’யில் பாடல் உருவாகிறது

Read Next

அன்று ‘இம்சை அரசன்’ இன்று ‘தெனாலி ராமன்’