வடிவேலு மீண்டும் நடிக்க வருகிறார் என்று நேற்று தெரிவித்திருந்தோம். அவர் நடிக்கப் போவது ஒரு சரித்திரப்படத்தில் என்பது இன்று தெரிய வந்துள்ளது. படத்திற்குப் பெயர் ‘தெனாலி ராமன்’.
‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படத்தில் தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்தவர் வடிவேலு. இரண்டு வேடங்களில் நகைச்சுவை அரசனாக அசத்தியிருந்தார்.
தெனாலி ராமன் படத்திலும் அவருக்கு இரண்டு வேடம்தான். ஒன்று தெனாலி ராமன், மற்றொன்று கிருஷ்ணதேவராயர்.
“போட்டா போட்டி படத்திற்குப் பிறகு ஒரு கதையைத் தயார் செய்து கொண்டிருந்தேன். இதைப் பற்றி எனது திரையுலக நண்பர்களிடம் தெரிவித்திருந்தேன். அதைப் பற்றிக் கேள்விப்பட்ட வடிவேலு என்னை அழைத்து கதையைப் பற்றி விவாதித்தார். இப்போது அந்த கதை ‘தெனாலி ராமன்’ ஆக தயாராக உள்ளது” என இந்த படத்தை இயக்கப் போகும் யுவராஜ் தெரிவித்துள்ளார்.
வாங்கய்யா…வாங்க…