விஸ்வரூபம் – இன்று 600 திரையரங்குகளில் வெளியாகிறது

viswaroopam-imageடிடிஎச், எதிர்ப்பு, வழக்கு, இப்படி பல பிரச்சனைகளைக் கடந்து ‘விஸ்வரூபம்’ திரைப்படம் தமிழகமெங்கும் இன்று ஏறக்குறைய 600 திரையரங்குகளில் வெளியாகிறது.

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் மொத்தம் 37 திரையரங்குகளில் வெளியாகிறது.

செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு ஆகிய பகுதிகள் அடங்கிய என்.எஸ்.சி எனப்படும் ஏரியாவில் மட்டும் 150 திரையரங்குகள் வரையில் திரையிடப்படுகிறது. இந்த ஏரியாவில் முதல் முறையாக அதிக திரையரங்குகளில் வெளியாகும் படம் ‘விஸ்வரூபம்’.

சென்னையிலும் மற்ற முக்கிய பெரு நகரங்களிலும் ஒரு வாரத்திற்கு ‘அட்வான்ஸ் புக்கிங்’ செய்யப்பட்டுள்ளதாக திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் தமிழகத்தில் வெளிவராத நிலையில் தமிழகத்தை ஒட்டிய ஆந்திர, கர்நாடக, கேரள  நகரங்களுக்குச் சென்று படம் பார்த்த பலரும் மீண்டும் அவரவர் ஊர்களில் படங்களைப் பார்க்க விரும்புவதாக நமது நட்பு வட்டாரங்களின் மூலம் அறிய முடிகிறது.

கொஞ்சம் லேட்டா வந்தாலும், ‘விஸ்வரூபம்’ ரிலீஸ் சினிமா ரசிகர்களிடம் ஆரவார வரவேற்புடன் கூடிய விஸ்வரூபத்தை எடுத்துள்ளது.

தமிழ்த் திரைப்படக் கலைஞர்கள் கலந்து கொண்ட விஸ்வரூபம் பிரிமீயர் ஷோ – புகைப்படங்கள் 

Read Previous

பார்த்திபன் இயக்கத்தில் ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’

Read Next

‘இதோ, நானும் வர்றேன்….’- ராஜகுமாரன்

Most Popular