இரு வேடங்களில் அனுஷ்கா

anushka in kahani remake newsஅனுஷ்கா தற்போது சூர்யா ஜோடியாக சிங்கம் 2, ஆர்யா ஜோடியாக இரண்டாம் உலகம், ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.

இதில் செல்வராகவன் இயக்கும் இரண்டாம் உலகம் படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு கதாபாத்திரம் பழங்குடிப் பெண் கதாபாத்திரமாம். இந்த படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு தற்போது ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்திற்காக அனுஷ்கா சண்டைப் பயிற்சிகளையும் பெற்றிருக்கிறார். மேலும் அவர் அடுத்து நடிக்கப் போகும் படங்களிலும் சண்டை போடக் கூடிய கதாபாத்திரங்களில்தான் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்வராகவன் மிக ஈடுபாட்டுடன் இயக்கி வரும் படம் இரண்டாம் உலகம். அவர் இதுவரை இயக்கிய படங்களிலேயே இந்த படத்தைத்தான் மிகவும் சவாலான படமாக கருதியுள்ளார்.

Read Previous

வட இந்தியாவிலும் பாலாவின் ‘பரதேசி’

Read Next

தமிழில் இரண்டு படங்களில் காஜல் அகர்வால்