தமிழில் இரண்டு படங்களில் காஜல் அகர்வால்

kaajal agarwal_00018கடந்த வாரம் ஒரு பத்திரிகை பேட்டியின் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியவர் காஜல் அகர்வால்.

ஆனால், அதன் பின் தான் சொன்னது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு விட்டது என வருத்தப்பட்டார். தமிழ், தெலுங்கு இரு மொழிகளுக்குமே  தான் மரியாதை கொடுப்பவள் என விளக்கமளித்தார்.

தமிழில் இரண்டு படங்களில் விரைவில் நடிக்க இருக்கும் போது இப்படி ஒரு பரபரப்பு கிளம்பி அவரைக் கொஞ்சம் வருத்தப்பட வைத்துவிட்டது. நல்ல வேளையாக பிரச்சனை அதோடு முடிந்து விட்டது.

காஜல் தற்போது தமிழில் கார்த்தியுடன் ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’ படத்திலும், விஜய்யுடன் மீண்டும் ‘ஜில்லா’ படத்திலும் ஜோடியாக நடிக்கவிருக்கிறார்.

இதில் கார்த்தியுடன் ஜோடியாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்குகிறது. ‘ஓகே ஓகே’ வெற்றிக்குப் பிறகு ராஜேஷ் இயக்கும் படம் இது. வழக்கம் போலவே ராஜேஷ் படத்தில், சந்தானமும் ஒரு  முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஸ்டுடியோ க்ரீன் இப்படத்தை தயாரிக்கிறார்கள்.

இதற்கடுத்து விஜய் ஜோடியாக ‘ஜில்லா’ படத்திலும் நடிக்கிறார். அநேகமாக விஜய் தற்போது நடித்து வரும்தலைவா படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இப்படம் ஆரம்பமாகலாம் எனத் தெரிகிறது.

Read Previous

இரு வேடங்களில் அனுஷ்கா

Read Next

‘தலைவா’ பாடல்கள் ‘எல்லாமே சரவெடிதான்’ – ஜிவி. பிரகாஷ்